கமல் ராஜ்.
தமிழர் மரபுவழி உழவர் திருவிழாவும் பட்டிப் பொங்கல் நிகழ்வுவும் நேற்று சாவகச்சேரி நகர மத்தியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் சங்கத்தானை முருகன் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர் சகிதம் மாட்டு வண்டி மற்றும் இசை வாத்தியங்களுடன் நடை பவனி ஆரம்பமாகி சாவகச்சேரி நகர மத்திய பஸ் நிலையத்தை பிற்பகல் 2.30 மணியளவில் வந்தடைந்தது.
அங்கு அமைக்கப்பட்ட விசேட அரங்கில் கோபூஜை மங்கல இசை பொங்கல், கௌரவிப்பு நிகழ்வு, நடன நிகழ்ச்சிகள், கவியரங்கம் மற்றும் இன்னிசைக் கச்சேரி ஆகியன நடைபெற்றன.
சிறப்பு விருந்தினர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், ம.ஆ.சுமந்திரன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன் ஆகியோரும், கெளரவ விருந்தினராக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானனும் கலந்துகொண்டனர்.
விசேட விருந்தினர்களாக சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் இ.சிவமங்கை, சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் க.வாமதேவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்டனர்.