இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் எதிர்கால சுபீச்சத்துக்காய் நாட்டினை பசுமையால் அலங்கரித்தல் என்ற தொணிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் 5000 மரக்கன்றுகள் நடும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்து அதில் ஈடுபட்டு வரும் அனைத்து பல்கலைகழக முஸ்லீம் மாணவர்கள் ஒன்றியதுடன் (AUMSA-All University Muslim Students Association) சம்மாந்துறை தொழிநுட்பவியல் இளமானி மன்ற அமைப்பின் (TUF STR-Technology Undergraduates’ Forum Sammanturai ) மாணவர்களும் இணைந்து மரம் நடும் வேலைத் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது இவ் வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மர நடுகை நிகழ்வு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் நேற்று (2020-02-10) இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் மற்றும் சம்மாந்துறை தொழிநுட்பவியல் இளமானி மன்ற அமைப்பின் தலைவர் வஹாப் நப்ரிஸ் ஆகியோரின் உரையோடு ஆரம்பமான இந் நிகழ்வில் சம்மாந்துறை தொழிநுட்பவியல் இளமானி மன்ற அமைப்பினரால் மரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, மர நடுகையும் செய்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் சம்மாந்துறை தொழிநுட்பவியல் இளமானி மன்ற அமைப்பினரின் இவ் வேலைத் திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு நல்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு அமைப்பின் தலைவரினால் நன்றிகள் தெரிவிக்கப்பட்டதோடு இது போன்ற சமுகத்திற்கான எழுச்சியில் அனைவரும் கைகோர்த்து நாட்டினை பசுமையாக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
TUF STR-Technology Undergraduates’ Forum Sammanturai அமைப்பினரின் முதற்கட்ட மர நடுகை நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை முனீர் வித்தியாலயத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
"மாற்றங்கள் ஒவ்வொருவரிடமும் வர வேண்டும்"