யாழ். பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீட்டத்தில் மாணவிகளை பாலியல் ரீதியான துன்புறுத்திய 8 பேரிற்கு பல்கலைக்கழக நிர்வாகம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கிளிநொச்சி வளாகத்தில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான தடையினை இன்று பத்தாம் திகதி முதல் விதித்துள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீடத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் மீது கொடூரமான முறையில் பகிடிவதை மேற்கொள்ள முற்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.