Ads Area

கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 72வது சுதந்திர தின நிகழ்வு.

நூருல் ஹுதா உமர்.

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 72வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. 

பிரதேச செயலக கணக்காளர் வை. ஹபிபுல்லா அவர்களின் நெறிபடுத்தலில் நடைபெற்ற இந் நிகழ்வில் இஸ்லாம், இந்து மத அனுஸ்டானங்கள் நடைபெற்றது.

மேலும் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வும் காரியாலய ஒன்றுகூடல் நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றதுடன் கிராம சேவகர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பிரத்தியேக இடமும் பிரதேச செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நிர்வாக சேவை அதிகாரி எம்.எப் மெளபீக்கா பஸீர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.இராஜதுரை, கணக்காளர் வை.ஹபிபுல்லா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எ.எம்.எச் மனாஸ் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி எம்.நஜிம்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீல், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம் முஹரப், நிர்வாக கிராம சேவை.உத்தியோகத்தர் யூ.எல் பதுருத்தீன்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான், உத்தியோகத்தர் உதவியாளர் ஏ.சி.எம் பழீல், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(காணிப்பிரிவு) யூ.எல் ரமீஸ்,நிதி உதவியாளர் எம்.ஐ.ஏ ரகுமான் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(திட்டமிடல் பிரிவு) எம்.ஹசன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe