Ads Area

இன-மத நல்லுறவை ஏற்படுத்துமுகமாக கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களினால் வீதி நாடகம்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்.

மத சுதந்திரத்திரமுடைய கலாச்சாரத்தை உருவாக்கும் பரிந்துரை செயற்பாடு எனும் தொனிப்பொருளில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை மாஞ்சோலை கிராமத்தில் விழிப்புணர்வு வீதி நாடகம் திங்கட்கிழமை இடம் பெற்றது.

எதிர்கால அபிவிருத்திற்கான உள்ளுர் முனைப்பு அமைப்பினால் அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர் வி.தயாநிதி தலைமையில் மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதங்களுக்கிடையிலான முரண்பாட்டினை தவிர்த்தல் மற்றும் இன நல்லுறவினை ஏற்படுத்துவது தொடர்பான செய்தியினை உள்ளடங்கியதாக வீதி நாடகம் அமைந்திருந்தது.

இங்கு மத சுதந்திரத்தின் முக்கியத்துவம், மதங்களின் மதிப்புக்கள், மதங்களின் கலாச்சாரங்களை கொண்டாடுதல், மதங்களுக்குரிய மரியாதை, இலங்கையில் மத சுதந்திரம் தொடர்பான சட்டங்கள் போன்ற கருத்துக்கள் உள்ளடங்கியதாக கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களினால் விழிப்புணர்வு வீதி நாடகம் நிகழ்த்தப்பட்டது.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe