இந்தப் பிரதேசத்து மக்களின் தமிழ் மொழி உச்சரிப்பும் தனது தனது உச்சரிப்பும் வித்தியாச மானது. தனது கருத்துக்களை மக்கள் விளங்கிக் கொள்ளவும் தனது உச்சரிப்பைத் திருத்திக் கொள்ளவும் தமிழில் பேசுவதாக சொன்னாராம் அலிசபரி அவர்கள்.
எமது கருத்து:-
எங்களது தாய் மொழியான தமிழையே முழுமையாக பேசவோ - பேசுவதை புரிந்துகொள்ளவோ முடியாத உங்களால் - எப்படி எமது அபிலாசைகளை அல்லது எதிர்பார்ப்புக்களை புரிந்துகொள்ள முடியும்? எப்படி எங்கள் உணர்வுகளை விளங்கிக்கொள்ள முடியும்?
1974 இல் தலைவர் அஷ்ரப் சட்டக் கல்லுரியில் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவராக தெரிவு செய்யப்பட்டவர். இருபது வருடங்களுக்குப் பிறகு 1994 இல் தான் அப்பதவியை வகித்ததாகத் தெரிவித்தார். இது அஷ்ரபின் அடிச்சுவட்டை இவர் பின்பற்றுபவர் என்று கூறுவதாம்.
எமது கருத்து:-
முஸ்லிம் மஜ்லிஸ் தலைவராக - தலைவர் அஷ்ரப்பிற்கு பிறகு - இவர் தலைவராக இருந்தார் என்பதற்காக - அஷ்ரப்பின் அடிச்சுவட்டை இவர் பின்பற்றுவது என்று அர்த்தப்படுத்துவதற்கு சிறுபிள்ளைத்தனமானது. முஸ்லிம் மஜ்லிஸின் தலைவராக ஒரு முஸ்லிமே வர முடியும். மாறாக வேற்று மதத்தை சேர்ந்து யாரும் வரமுடியாது.
அதாவது சுதந்திரமான தலைமையாக - ஒன்றில் முஸ்லிம் காங்கிரஸில் அல்லது ஒரு முஸ்லிம் தலைமையின் தலைமையிலான ஒரு தேசிய அரசியல் நிறுவனத்தில் இருக்க வேண்டும்.
தவிர, அஷ்ரப் எப்போதோ முஸ்லிம்களுக்கு நண்மை பயக்காது என்று எண்ணி கைவிட்ட பேரினவாத கட்சியில் இருக்க முடியாது.
ஜித்தாவில் இலங்கைத் தூதுவராக தான் இருந்தபோது அஷ்ரப் அங்கு வந்தால் தன்னுடனேயே தங்குவார், முஸ்லிம் சமூக அரசியல் பற்றிப் பேசுவார் என்று அஷ்ரபுடனான நெருக்கத்தை தெரிவித்தாராம்.
எமது கருத்து:-
தலைவர் அஷ்ரப் பாராளுமன்ற உறுப்பினராக / அமைச்சராக இருந்த காலத்தில் - இவர் தூதுவராக இருந்ததால் - அஷ்ரப்பை வரவேற்றல், தங்கவைத்தல், சேமநலன்களை கவனித்தல் என்பது - இவருடைய கடைமைகளில் ஒன்று.
ஆறு வருடங்கள் அஷ்ரப் அமைச்சராக இருந்து முஸ்லிம் சமூகத்துக்கு அளப்பரிய சேவைகள் புரிந்தார். இருபது வருடங்ககள் பதவி வகித்த தற்போதைய முஸ்லிம் தலைமைகள் எதையும் வெட்டிக் கிழிக்கவில்லை எனவும், இதனால் முஸ்லிம் சமூகத்துக்குக்காக புதிய தலைமைத்துவத்துவம் தேவை எனவும் கூறினாராம்.
எமது கருத்து:-
நீங்கள்🏽 முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று கூறுவதும் போது 🏽ஒரு முஸ்லிம் கூட அமைச்சரவையில் சேர்க்கப்படாத போது 🏽விவாக விவாகரத்து சட்ட நீக்கத்திற்காக பாராளுமன்றத்தில் பிரேரனை கொண்டுவரப்பட்ட போது 🏽வெட்டுப்புள்ளியை 12.5% ஆக உயர்த்த பாராளுமன்றத்தில் பிரேரனை கொண்டுவரப்பட்ட போது பெரும்பான்மை அங்கிகரிக்காத தீர்வை சிறுபான்மைக்கு வழங்க முடியாது எனக்கூறப்படுகிற போது 🏽ஒட்டு மொத்த மத்ரசாக்களையும் இழுத்து மூடும் முயற்சிகள் இடம்பெறும் போது 🏽முஸ்லிம்களின் ஏற்றுமதி பொருளாதாரம் நசுக்கப்படுகின்ற போது 🏽நெலுந்தெனிய பள்ளிவாயில் வளவில் சிலைவைக்கப்படுகின்ற போது 🏽ஒரே ஒரு முஸ்லிம் GA பறிபோகிற போது என்ன கிழித்தீர்கள் என்று கூற முடியுமா?
கொள்கைரீதியாகவேனும் இவற்றை எதிர்த்து ஒரு அறிக்கையையாவது வெளியிட்டீர்களா? அதன் காரணம் என்ன?
எமது கருத்து:-
ஆம், அஷ்ரப் அப்படி சொன்னார். ஆனால், நுஆ கட்சியை - அஷ்ரப் - அவரே தலைமை தாங்கிதானே - தேசிய நீரோட்டத்தில் அதாவது நுஆ கட்சியை முஸ்லிம் ஒருவர் தலைமை தாங்குவதனூடாக தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டுமென்றுதானே வழிகாட்டினார்.
அஷ்ரப் பேரினவாத கட்சி ஒன்றில் சரணடைந்து தேசிய நீரோட்டத்தில் இணையவில்லையே நீங்கள் பேரனவாத கட்சியின் அடிமையாக இருக்கிறீர்களே பின்னர் நீங்கள் எப்படி அஷ்ரபை பின்பற்றுவதை பற்றி பேச முடியும்?
இனவாத அரசியலை விடுத்து கொள்கை அரசியலே தேவை என்றும் கூறினார்
எமது கருத்து:-
தேசியப்பட்டியல் ஒன்றை பெறுவதை தவிர உங்கள் கொள்கை என்ன என்று கூற முடியுமா? பெரும்பான்மைக்கு அடிமைகளாகவே முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்ற கருத்தைதான் நீங்கள் விதைப்பது ஏன்? இலங்கையில் இனவாதம் பேசுவது முஸ்லிம்களா? கடும்போக்கு பௌத்த இனவாதிகளா? பதில் சொல்லுங்கள்.
இனவாதத்திற்கும் "இன அக்கறைக்கும்" உங்களுக்கு வித்தியாசம் தெரியுமா?
முஸ்லிம்களை பேரினவாத கட்சிகளில் கரைந்து - அரசியல் முக்கியத்துவமில்லாத சமூகமாக முஸ்லிம் சமூகத்தை மாற சொல்வதன் அர்த்தம் என்ன?
இன்னும் பேசுவோம் இன்ஷா அல்லாஹ்