கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளமை பொதுத் தேர்தலின் போது முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
இவ்வாறு வாக்குகளை பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாட்டின் சுயாதீன தன்மையை இல்லாதொழிக்கும் முயற்சியிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார் . கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது நகரசபையை உருவாக்குவதற்கான அதி விசேட வர்த்த மானியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.