எமது அண்டைய கிராமமான சாய்ந்தமருதூருக்கு நகரசபை கிடைத்ததையிட்டு சந்தோசமடைகின்றோம். அதனை மனதார வரவேற்கின்றோம். அதேபோல் தமிழ்மக்களின் நியாயமான உணர்வுகளையும் அரசியல் தலைவர்கள் மதிக்கவேண்டும்.
இவ்வாறு சாய்ந்தமருது நகரசபையாக வர்த்தமானிப்பிரகடனம் செய்துள்ளமையையடுத்து காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்மக்களையும் தமிழ்த்தலைவர்களையும் பொறுத்தவரை ஏனைய இனத்தின் உரிமைவிடயத்தில் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.இருக்கப்போவதுமில்லை. ஆனால் ஒரு சில முஸ்லிம் தலைவர்கள் தமிழர்கள் விடயத்தில் முட்டுக்கட்டையாக இருந்துவந்துள்ளனர். இனியாவது அவர்கள் அந்த மாயையிலிருந்து விடுபடவேண்டும்.