Ads Area

ஞானசார தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற தீர்ப்பை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு எதிராக கலகொட அத்தே ஞானசார தேரர், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்தி சிறிஸ்கந்தராஜாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஏ.ச்.எம், நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபயசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது நீதிபதிகள் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூவரை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe