சிற்றூண்டிப் பக்கற்றுக்குள் மறைத்து கத்தாருக்குள் கடத்தப்படவிருந்த கஞ்சா பொதிகள் சுங்க அதிகாரிகளாக பறிமுதல் செய்துள்ளனர். கத்தார் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்த வேளையில் இந்த பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கத்தார் சுங்க திணைக்களத்தின் உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் இது தொடர்பான வீடியோப் பதிவு பகிரப்பட்டுள்ளது.
ஆசிய நாடு ஒன்றிலிருந்து கத்தாருக்கு வந்த பயணி ஒருவரின் பெட்டியில் சிற்றூண்டிப் பக்கற்றுகள், மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களில் மறைத்து இந்த கஞ்சா கத்தாருக்குள் கடத்தப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கஞ்சா 6.080 கிலோ கிராம்கள் நிறையுடையது என்பதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர்கள் தகுந்த சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்பதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Qatartamil