அண்மையில் மு.கா மீது அதிருப்தி என்ற போர்வையில் கட்சியில் இருந்து, வெளியேறிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளுக்காக எக்கட்சியில் இணைவார். தற்கால சூழ்நிலையில், ஆட்சி அதிகாரம் இருப்பவர்களின் பக்கம் பாய்வது எம், அரசியல்வாதிகளுக்கொன்றும் புதிதல்ல. அந்த வகையில் தற்போது, தேசிய காங்கிரசின் பக்கம் தாவும் படலம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தே.காவின் பக்கம் செல்வாரா?
தே.கா மூலம் நாடாளுமன்ற வாய்ப்பு கிட்டுமா?
இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு போட்டிகளுக்கு மத்தியிலே, தேர்தலை எதிர்நோக்க வேண்டிய நிலைக்குள் அனைத்துக் கட்சிகளும் தள்ளப்பட்டிருக்கின்றது. இந்நிலையிலே, மாஹிரும் தே.கா சார்பில் போட்டியிட்டால், மு. அமைச்சர் அதாவுல்லாஹ்வின் வாக்குகளுக்கு வழுச் சேர்ப்பதாக அமையும். ஆனால் அவ்வாறு வழுச்சேர்த்தாலும் அதாவுல்லாஹ் வெற்றிபெறுவாரா என்பது கேள்விக்குறியாகவே அமையும். அதே சமயம் அதாவுல்லாஹ்வும் தன் வெற்றிக்காக பல வியூகங்களை அமைத்து தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். அப்படி இருக்கும் நிலையில் தே.காவுடன் இணைந்தால் மாஹிரின் கனவு கலைந்துவிடும். ஆனாலும், தே.காவின் மூலம் மாகாண சபைக் கதிரையை அலங்கரிக்கலாம். மாஹிரின் தீர்மானம் கனவைக்கலைக்குமா? அல்லது கனவின் பக்கம் அரசியல் நகர்வு தொடருமா?
முஹம்மட் மனாசிர்,
சம்மாந்துறை.