நடந்து முடிந்த 2020ஆம் ஆண்டுக்கான இளைஞர் பாரளுமன்ற தேர்தலில் கல்முனை பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக கல்முனை வோகஸ் இளைஞர் கழக தலைவரும், லெஜண்ட்ஸ் விளையாட்டு கழக வீரரும், ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவருமாண ஏ.எல்.முஹமட் அஸ்கி பெரும்பான்மையான வாக்குகளின் அடிப்படையில் கல்முனைக்கான இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.
கல்முனைக்குடி நகர மண்டப வீதியைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அபூபக்கர் அஹமட் லெப்பை, இப்ராலெப்லை ரபீக்கா வீவி என்பவர்களின் புதல்வர் என்பதுடன் இளைஞர் சேவை அதிகாரி அஸீம் உடைய சகோதரருமான முஹம்மட் அஸ்கி சிறுவயது தொடர்க்கம் பல்வேறுபட்ட சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வரும் ஒரு துடிப்புள்ள இளைஞராகவும் திகழ்கின்றார்
கல்முனை பாக்கியதுஸ் ஸாலிஹா மஸ்ஜித்தில் யூத் வித் டலன்ட் வேலைத்திட்டம் ஊடாக பைசிக்கல் தரிப்பிடம் மற்றும் கழிவுக்குழி அமைத்து கொடுத்துள்ளார்.
அத்தோடு வெற்றிகரமான நான்கு பிரதேச விளையாட்டு போட்டிகளுக்கு தலைமை தாங்கி அதனை சிறப்பாக வழிநடாத்தி வெற்றி கண்டுள்ளார்