Ads Area

பெண்ணுக்கு 35 லட்சம் பெறுமதியான வீடு வளவை மஹராகக் கொடுத்து மணமுடித்த காத்தான்குடி இளைஞன்.

காத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவிலும், உறுதி எழுதியும் பதிவு செய்து திருமணம் முடித்துள்ளார் காத்தான்குடி இளைஞர் ஒருவர்.

குறித்த திருமணத்தில் கலந்து கொண்ட ஜஃபர் அலி 
Jaufar Ali என்பவர் குறித்த விடையத்தினை பின்வருமாறு விபரிக்கின்றார்.

தற்போது சமூகத்தில் சாதாரண நடுத்தர இளைஞர்கள் மஹர் தொகையை நகைகளை,பணத்தொகை என்பவற்றை வழங்கி திருமணம் முடிக்கின்றனர். ஆயினும் தான் சம்பாதித்து கொள்வனவு செய்த வீட்டையே மஹராக உறுதியும் எழுதிக்கொடுத்து திருமணம் முடித்த விடயம் நான்றிந்த வரை இதுவே முதலாவதாகும்.

இத்திருமணத்தைப் பதிவுசெய்த விவாகப்பதிவாளர் U.L.M.Jabeer.jp அவர்களும் 
தனது 25 வருட பதிவாளர் அனுபவத்தில் 4600க்கு  மேற்பட்ட பதிவுகளில் மஹராக வீட்டைப் மணமகன் மணமுவந்து கொடுத்து திருமணம் செய்தமை இதுவே முதற்தடவையாகும் என தெரிவித்தார்.

இது விடயமாக அறிந்தவுடன் மணமகனைக் கண்டு விடயத்தை உறுதிசெய்த பின் அவருக்கான  என் ஆத்மார்த்த பிராரத்தனைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டேன். இதில் பிரதானமாக நாம் கவனிக்க வேண்டய விடயங்கள்:

1.வறுமையான குடும்பத்தில் பிறந்து தன் உழைப்பைக் கொண்டு
வாங்கிய வீட்டை மீளப்பெற முடியாத அன்பளிப்பாக கொடுத்து ஒரு ஏழையை சுதந்திரமாக வாழ்வதற்கான துணையை பெற்றுக்கொண்டமை.

2.இவர் தனது துணையை மார்க்கம் ஒன்றையே முதன்மை படுத்தி தேர்வு செய்தமை.

3.இவர் முறையாகப் பேசியே இத்திருமண துணையைப் பெற்றுக்கொண்டமை.

4.மஹராக கொடுத்தால் அதில் தனக்கு உரிமையில்லை எனத் தெரிந்தும் தேர்ந்தெடுத்த மணமகள் மீது அதீத நம்பிக்கை கொண்டு மணவாழ்வை ஆரம்பித்தமை.

இம்மணமக்கள்  எதிர்காலத்தில்  இறையருளுடன் நிம்மதியும்,நற்பேறுகளும் 
பெற்று நிறைவுடன்  நீடு வாழ அல்லாஹ் அருள் புரிவானாக!
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe