எஸ்.எச்.எம். பிர்தௌஸ்.
மருதூர் மக்களின் நீண்ட நாள் போராட்டம் யாரும் எதிர்பாராத சூழலில் சாத்தியமாகி போனது எல்லோரும் சந்தோசப் படவேண்டியது பாராட்டப்படவேண்டியது ,
இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை ,ஆனால் இந்த நகரசபை போராட்ட வெற்றியை ஏதோ மருதூர் மக்களுக்கு தனி நாடு கிடைத்துபோல் பிரச்சாரப் படுத்திய அதைப் பெற்றுக் கொடுத்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களின் ஆதரவு அணி , மற்றும் மருதூரை சேர்ந்த சில அரை வேக்காட்டு கிணற்று தவளைகள் போன்ற உசார் போக்கு கொண்டவர்களும் இன்றைய நாட்டு இனவாத அரசியலின் போக்கு குறித்த தெளிவு கிடையாத சிறு பிள்ளைகள் போன்ற கும்பல்களுக்கும் கூட இன்றைய ஐ தே கட்சியின் ஹிருனிகா மற்றும் மருதூரின் மாப்பிள்ளை மரைக்கார் போன்றவர்களின் தெற்கு நோக்கிய இனவாத பிரச்சாரத்துக்கான வழிசமைத்த சம பங்கு உண்டு என்பதை புரிந்து கொண்டால் சரிதான் ,
ஆனால் இவற்றை சிங்கள இனவாத ஊடகங்களும் அவற்றின் ஊடகவியலாளர்களும் அதே போன்று முஸ்லிம் விரோத இணையங்களும் பெரும் Breaking news களாக விளம்பரப்படுத்தி தங்களது அறுவடையை சிங்கள மக்களிடத்தில் செய்து கொள்கின்றனர் ,
கடந்த வருட கல்முனையில் வியாளேந்திரன் கும்பலினதும் அதற்கு ஆதரவாக களம் இறங்கிய அத்துரலியே மற்றும் ஞானசார போன்றவர்களின் பங்குபற்றல்களுக்கும் தலையீடுகளுக்கும் கூட இந்த ஆர்ப்பாட்ட ஆரவரிப்பு பிரச்சாரங்களும் நேரடி ஒளி ஒலி பரப்புக்களுமே காரணம்,
அதற்கு உள்ளூர் ஊடகங்கள் சிலவும் முகநூல் நேரடி ஒளிபரப்புக்களும் கூட ஒத்தாசை வழங்கி ஆலவட்டம் பிடித்தனர் ,ஆனால் இதை மருதூரின் வெற்றி விடயத்தை கொண்டாடிய பல வெளிமாவட்டங்களில் சிங்கள மக்களோடு கலந்து வாழும் பல படித்தவர்கள் இதன் மறுபக்கத்தை கூறிய போதும் சிலர் அதை கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை ,
ஆனால் இன்று இது எவ்வளவு தூரம் இனவாத அரசியலுக்குள் தன்னை ஈடுபடுத்தி விட்டுள்ளது என்பதை இனவாதிகளான ஹிருணிகா போன்றவர்களும் ஏன் எமது முஸ்லிம் இனத்தை சேர்ந்த மரைக்காயர் போன்றவர்களும் தங்களது கட்சி தேர்தல் வியுகத்துக்கு பயன்படுத்த முனைகின்றனர் என்பதை பார்க்கும் போது நாம் இன்னும் பக்குவப்படாத சமுகமாக வெறும் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு பட்டாசுக்கு பின்னால் பறந்து திரியும் மக்கள் கூட்டமாகவே உள்ளோம் ,
எந்த அரசியல் தீர்வுகளும் முடிவுகளும் ஒப்பந்தங்களும் கூட மாறி மாறி வரும் ஆட்சிகளாலும் பெரும்பான்மை கட்சிகளாலும் நிறைவேறாது ,அவ்வாறு நிறைவேற்றப்பட்டாலும் அவற்றை நீதிமன்றம் சென்று வலுவற்ற தாக்கும் நிலையிலும் , மற்றும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தூக்கி வீசும் நிலையிலும் ,அதே போன்று சர்வதேச நாடுகளுடன் செய்யும் ஒப்பந்தங்களை கூட தூக்கி எறியும் நிலையில் கட்சி ஆட்சி நடைபெறும் எம் நாட்டில் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தலை அதுவும் இன்னும் இரண்டு வருடத்தில் தான் சாத்தியமாகும் என்ற நிலையில் ,அதைக்கூட இன்னும்ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வறிதாக்கவும் முடியும் என்ற அரசியல் ஆட்சி மாற்ற சூழலில் இவ்வாறான ஆரவாரங்களும் கொண்டாட்டங்களும் எமது சமுகத்துக்கு எந்த நன்மைகளையும் அள்ளித் தரப்போவதில்லை என்பதையும் அவை எதிர்மாறான விளைவுகளை கூட எமக்கு மட்டும் அல்ல இந்த விடயத்துக்காக நீங்கள் நன்றி கடன் செலுத்த என நீங்கள் ஆதரிக்கும் தரப்புக்கும் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் ,
எல்லாவற்றையும் அமைதியாகவும் பொறுமையாகவும் ஆரவாரமின்றி யும் நாட்டின் அரசியல் சூழல் அறிந்தும் செயற்படுத்துங்கள் , செயற்படுவோம் ,நாசகார சஹ்றான் கும்பலை இந்த நாட்டில் இருந்து கூண்டோடு அழிக்க துனைபோன எம்சமுகம், எம் மருதூர் மீண்டும் சில இனவாதிகளால் அந்த நாசகார சஹ்றானின் பூமியாக அடையாளம் காட்டிக் கொடுக்கப்பட நாமே நம் செய்கைகளால் வழி செய்து கொடுக்காதீர்கள்.
Thanks - naspflankanews
Thanks - naspflankanews