மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை இரவு கொழும்பில் இடம்பெற்றுள்ளதாகவும் மு.கா. தலைவரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமையவே இந்தச் சந்திப்பு, தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேரா சிரியர் ஏ.எம். இஷாக் இல்லத்தில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது மு.காங்கிரஸின் முன்னாள் செயலாளரான ஹசனலியை மீண்டும் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு, மு.கா. தலைவர் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. இதற்காக மு.காங்கிரஸின் யாப்பில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்குத் தான் தயாராக உள்ளதாகவும் ஹக்கீம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.