ஐ.எல்.எம் நாஸிம்.
சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய உபதவிசாளராக ஸ்ரீ ல.சு.கட்சியின் அமைப்பாளரும், சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினருமான எ.அச்சு முகம்மட் (நைப்F) தெரிவாகியுள்ளார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளராக கடமையாற்றி வந்த வெ.ஜெயச்சந்திரன், தனது உபதவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்ததனையடுத்து எ.அச்சு முகம்மட் (நைப்F) அவர்கள் தற்போது புதிய உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு, மக்கள் வாக்குகள் மூலம் நேரடியாகத்தெரிவான வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த வெ.ஜெயச்சந்திரன், இரண்டாண்டு காலமாக கட்சித் தீர்மானத்துக்கமைவாக உப தவிசாளராகச் செயற்பட்டு வந்தார். கட்சியுடன் செய்துகொண்ட உடன்படிக்கை காரணமாக, அவர் தனது உப தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்து, சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளருக்கு எழுத்துமூலம் கடிதம் சமர்ப்பித்திருந்தார்.
வெ.ஜெயச்சந்திரன் அவர்கள் தனது பதவியை ராஜினாமைா செய்ததனை அடுத்து எ.அச்சு முகம்மட் (நைப்F) அவர்கள் தற்போது பிரதேச சபையின உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.