Ads Area

சவுதியிலிருந்து இலங்கை செல்வதற்கும் இலங்கையிலிருந்து சவுதி வருவதற்கும் தடை.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய கொடிய வைரஸ் நோயான கொரோனா தற்போது வளைகுடா நாடுகளையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கட்டாரில் நேற்று மாத்திரம் 238 பேர் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக கண்டறியப்பட்டுள்ளார்கள் அதே போல் சவுதி அரேபியாவிலும் கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன இதுவரை சவுதியில் 45 பேர் வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.



இக் கொடிய நோய்த் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க சவுதி அரேபியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது இதனையொட்டி 39 நாடுகளுக்கு பயணத்தடைகளையும் சவுதி அரேபியா விதித்துள்ளது. பயணத்தடை விதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் தற்போது இந்தியா இலங்கை போன்ற நாடுகளையும் உள்ளடக்கியுள்ளது சவுதி அரேபியா.

குறித்த நாடுகளைச் சேர்ந்த சவுதி அரேபியாவில் பணிபுரிவோர் யாரும் அந் நாடுகளுக்குச் செல்லவோ அல்லது அந் நாடுகளில் இருந்து சவுதிக்கு வரவோ தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்,  சுவிட்சர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், சூடான், எத்தியோப்பியா, தென் சூடான், எரிட்ரியா, கென்யா, ஜிபூட்டி மற்றும் சோமாலியா போன்ற நாடுகளுக்கு செல்வதையும் அங்கிருந்து வருவதையும் தற்காலிகமாக தடை செய்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த மார்ச் 9 அன்று  ஓமான், பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், லெபனான், சிரியா, ஈராக், எகிப்து, இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கான பயணத்தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் தற்போது இப்பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம் - https://english.alarabiya.net
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe