உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், பலர் உயிரிழந்து வரும் நிலையில், நோய் தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த கர்நாடகாவை சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத்தொடங்கிய உயிர்கொல்லி 'கொரோனா வைரஸ்' உலகின் 100 நாடுகளுக்கு பரவியது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலக அளவில் 4,295 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் பரவிய கொரோனாவை தடுக்க மத்திய, மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50லிருந்து 60ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கேரளாவை சேர்ந்த 8 பேர், ராஜஸ்தான் மற்றும் டில்லியில் தலா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த அவரின் சளி, ரத்த மாதிரிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், இன்று உயிரிழந்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறப்பிற்கான காரணம் சொல்லப்படவில்லை.