கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய ஏழு வழிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
01. வீரர்கள் சோப்பு போட்டு, தங்களது கையை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும்.
02. அதற்காக, கையை சுத்தம் செய்யும் திரவத்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
03. தும்மல், இருமலின் போது வாயை மறைத்துக் கொள்ளவேண்டும்.
04. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ குழுவிடம் தெரிவிக்கவும்.
05. கையை கழுவுவதற்கு முன்பு முகம், வாய், மூக்கைத் தொடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
06. வெளி உணவகங்களில் சுகாதாரமற்ற வகையில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
07. வெளியாட்களுடன் நெருக்கமாக அமர்ந்து பேசுவது, கை குலுக்குவது, ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பதையும் தவிர்க்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.