இரவு நேரப் பயணங்களில் ஈடுபடும் எமது உறவுகள் தயவுசெய்து அவதானமாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் மட்டக்களப்பிலிருந்து ஏறாவூரை நோக்கி வருகின்ற வழியில் பிள்ளையாரடி ஊரணி போன்ற இருளடைந்த பிரதேசங்களில் பிரதான வீதியோரமாக மயக்கமுற்று கிடப்பது போல் அல்லது விபத்துக்குள்ளாகி இருப்பதுபோல் உங்கள் கண்களுக்கு யாரேனும் தென்படும்போது தயவுசெய்து உங்கள் வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு உதவுவதற்கு முன் செல்லாதீர்கள்.
காரணம் !
பாதுகாப்புத் தரப்பினர் தவிர வேறு யாரேனும் உங்கள் வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்க இவ்வாறான வேலைகளை செய்கிறார்கள் மயங்கிக் கிடப்பவருக்கு உதவுவதற்கு நீங்கள் செல்லும்போது உங்களை எதிர்பார்த்து மறைவில் காத்திருந்த கொள்ளையர்கள் அவ்வித்துக்கு சமூகம் தந்து உங்களுடைய பணம் நகை போன்றவற்றை கொள்ளையடித்துச் செல்ல வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
நேற்றைய முன் தினம் ஏறாவூரை சேர்ந்த தம்பதியர் இவ்வாறான சம்பவத்தை சந்தித்து இறைவன் உதவியால் புத்தி சாதுரியமாக தப்பித்து வந்து வந்துள்ளார்கள்.
ஏறாவூர் நஸீர் ஹாஜியார்