வெளிநாட்டு நிதியை கொண்டு மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்கலைக்கழகத்தை கொரோனா வைரசுக்கான சிகிச்சை நிலையமாக மாற்ற எடுக்கும் அரசின் நிலைப்பாடானது கண்டிக்கத்தக்க செயலாகும் என முன்னாள் இராஜாங்க அமைசர் எச்.எம்.எம். ஹரீஸ் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் அவர் தெரிவிக்கையில்
எமது நாட்டில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல்வேறு கட்டடத் தொகுதிகள் இருக்கின்ற நிலையில் இந்த பல்கலைக் கழகத்தை அரசு தெரிவு செய்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார் மேலும் இதை இங்கு அமைக்க அரசு எடுத்த முடிவானது அதை அண்மித்து வாழுகின்ற முஸ்லிம் மக்களுக்கு பெரும் பாதிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே இதை அரசாங்கம் இப்படியான ஒரு இடத்தில் மேற்கொள்வதை கைவிட்டுவிட்டு வேறொரு இடத்தில் அமைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.