Ads Area

கொரோனா தடுப்பு முகாம் - மட்டக்களப்பில் வலுக்கும் போராட்டங்கள்!

கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து வருபவர்களை மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கண்டகாடு புனர்வாழ்வு நிலைய தடுப்பு முகாமிற்கு கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்னால் நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனையடுத்து மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தின் முன் நூற்றிற்கும் மேற்பட்ட பொதுக்கள் ஒன்றிணைந்தனர்.

இதனையடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் கோரோனா பரிசோதனை வேண்டாம், அரசே சிகிச்சைக்காக மக்கள் நடமாட்டமற்ற பிரதேசத்தை தெரிவு செய், மட்டு வைத்தியசாலை பொது மக்களுக்கானது, தனியான தனிமைப்படுத்தும் வைத்தியசாலையை ஏற்பாடு செய், நீங்கள் எங்களை வேறுபடுத்துகின்றீர்களா, கொரோனாவை எமக்கு திணிக்க வேண்டாம், என பவ்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட ஊர்வலமாக வைத்தியசாலை வீதி வழியாக வைத்தியசாலைக்கு முன்பு வந்தடைந்து வைத்தியசாலைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe