(எம் .என்.எம்.அப்ராஸ்)
கிழக்கு இளைஞர் அமைப்பின் மகளிர் தின நிகழ்வுகள் அமைப்பின் தலைவர் தானிஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் (08) பிற்பகல் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அரசியல் புரட்சிகர முன்னணி ஸ்தாபக செயலாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எம்.சி ஆதம்பாவா மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் துறை சார்ந்த பெண்கள் கெளரவிக்கப்பட்டனர் .