தமிழ்நாடு
கோவை கணபதி ரூட்ஸ் கம்பெனி எதிரில் உள்ள வேதம்பாள் நகர் பகுதியில் பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசல் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று இரவு ஒரு மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் யாருக்கும் எந்த வித பாதிப்புமில்லை.