Ads Area

மாணவி ஒருவருக்கு இணைய வாயிலாக கற்பழிப்பு மிரட்டல் விடுத்தவரை அதிரடியாக பணி நீக்கிய துபாய் ஹோட்டல்.

சிஏஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியின், பிறப்புறுப்பை சிதைத்து விடுவேன் என மிரட்டிய துபாய் ஓட்டல் ஊழியர் பணி நீக்கம்.

உத்தர்காண்ட் மாநிலத்தின், பைஞ்வாரி நகரை சேர்ந்தவர் 38 வயதான திரிலோக் சிங், கடந்த இரண்டு வருடங்களாக துபாயின், டெய்ராவிலுள்ள கோல்டு சவுக் பகுதியில் இருக்கும், பிரபல இந்திய பார்பிகி்யூ ஓட்டலில் சிறப்பு உணவு தயாரிப்பாளராக பணியாற்றிவரும் அவர், சிஏஏவிற்கு எதிராக முகநூலில் தனது கண்டனங்களை பதிவு செய்திருந்த டெல்லியை சேர்ந்த சட்டமாணவியான ஸ்வாதி கன்னாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இந்தியில் பதிவுகள் எழுதி மிரட்டியிருந்தார்.


அதில், மாணவி ஸ்வாதியை ஒரு விபச்சாரி என்றும், டெல்லியில் நடக்கும் கலவரங்களில் ஸ்வாதி கற்பழிக்கப்படுவாள் அவளது பிறப்புறுப்பு சிதைக்கப்படும் என மிக வக்கிரமாக பதிவிட்டிருந்தார்.

இதனை Gulf News பத்திரிகை வாயிலாக அறிந்துகொண்ட அந்த உணவக நிர்வாகம், உடனடியாக திரிலோக்கை அழைத்து அவரது பணிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்த கையோடு அவரது விசாவினையும் ரத்தாக்க எழுதியனுப்பிவிட்டது.


இதுபற்றி தகவலளித்த சக ஊழியரான கனி என்பவர், முதலில் கல்ப் செய்திகளுக்கு நன்றியுரைத்தார் பிறகு, பெண்களுக்கு எதிரான வன்மங்களை எங்களது நிர்வாகம் எப்போதும் அனுமதிக்காது. அது தவிர இவரை போன்ற மனப்போக்குடையவர்களை எங்களுடன் பணியாற்ற நாங்கள் விரும்புவதில்லை என தெரிவித்தார். முன்னதாக திரிலோக் , டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் பணிபுரிந்தவர் என்பது தெரியவந்தது. பிறகு அந்த ஓட்டலும் இவருக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் தற்போது எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டு கை கழுவி விட்டது.

செய்தி - https://gulfnews.com




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe