ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளராக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (11) கொழும்பில் பிரதமரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் தலைமையில் பிரதமர் கெளரவ மஹிந்த ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் காதர் மஸ்தான் அவர்கள் உரிய பத்திரத்தில் ஒப்பமிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளராக பிரகடனம் செய்யப்பட்டார்.