கல்முனை அஷ் ஷுஹரா வித்தியாலயத்தின் புதிய அதிபராக செல்வி எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா (SLPS - iii. BEd (Hon) ,MED , PGDEM, LLB (Red) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக இப் பாடசாலையின் அதிபராக இருந்த ஜனாப். ஏ. எல். அப்துல் கமால் அவர்கள் கடந்த செவ்வாயன்று 03.03.2020 அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து பாடசாலையில் பிரதி அதிபாராக கடமை புரிந்த இவர் நிரந்தர அதிபராக 2020.03.04 நேற்று தனது கடமையினை பொறுபேற்றார்.
இந் நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி பி.எம். பதுறுதீன் ,முன்னாள் அதிபர் . ஏ. எல். அப்துல் கமால், பாடசாலை ஆசிரியர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள் ,பெற்றோர்கள் ,நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் புதிய அதிபருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.