சம்மாந்துறை கல்லரிச்சல் - 03 பிரதேசத்தில் அமைந்துள்ள மத்ரஸதுல் முத்தகீன் குர்ஆன் மத்ரஸாவில் கல்வி கற்ற 23 மாணவர்கள் கடந்த வருடம் சம்மாந்துறை அனைத்து குர்ஆன் மத்ரஸாக்கள் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட வருடாந்த பொதுப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று சித்தியடைந்ததனையிட்டு அவர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று 2020-03-10 இடம் பெற்றது.
இந் நிகழ்வில், மத்ரஸதுல் முத்தகீன் குர்ஆன் மத்ரஸாவின் தலைவர் மௌலவி பிர்தௌஸ், அம்பாறை மாவட்ட ஜம்யதுல் உலமா சபையின் பொருளார் மௌலவி நதீர் அவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு.