Ads Area

தமிழ் மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது எனது தார்மீகக் கடமை - தவிசாளர் நௌஷாத்.

காரைதீவு சகா.

அன்று பொத்துவில் நிந்தவூர் தொகுதிகளில் 90 வீத தமிழ்மக்களின் வாக்குகளில் பாராளுமன்ற உறுப்பினர்களானவர்கள் எனது தந்தையார் சுவீப் மஜீத்தும் எனது மாமனார் பீஏ மஜீத்தும். அந்த பரம்பரையில் வந்த இறுதி அரசியல்வாதி நான். எனவே அந்தமக்களுக்கும் சேவை செய்யவேண்டியது எனது தார் மீககடமை.

இவ்வாறு காரைதீவு சம்மாந்துறை நல்லிணக்கக்குழுக்கள் இணைந்துநடாத்திய  சமுக நல்லிணக்கத்திற்கான ஒன்றுகூடலில் உரையாற்றிய  சம்மாந்துறை பிரதேசசபைத் தவிசாளர் எ.எம்.எம்.நௌசாட் தெரிவித்தார்.

இவ் ஒன்று கூடல்  காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில்  பிரதேச நல்லிணக்கக்குழுத்தலைவர்களான எஸ்.தங்கவேல்(காரைதீவு) ஏ.சுதர்சன்(சம்மாந்துறை) தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதிகளாக பிரதேச செயலாளர்களான சிவ.ஜெகராஜன்(காரைதீவு) எஸ்.எல்.எம்.ஹனிபா(சம்மாந்துறை) விசேட அதிதிகளாக தவிசாளர்களான கே.ஜெயசிறில்(காரைதீவு) எ.எம்.எம்.நௌசாட்(சம்மாந்துறை)ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

முன்னதாக காரைதீவு விபுலாநந்த சதுக்கத்தில் நல்லிணக்க வாசகம் பொருந்திய பதாதை அதிதிகளால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

அங்கு தவிசாளர்நௌசாட் மேலும் உரையாற்றுகையில்:

34வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் 17வருடங்கள்தனிமனிதனாகவும் வாழ்ந்த எனதுமாமனர் பீஏ மஜீத்தை இப்பிராந்தியமே சேர்ந்து அடக்கம் செய்தது. அவர்அப்படி நல்லிணக்கத்தின் அடையாளமாக வாழ்ந்தார்.

1970 தொடக்கம்1987 வரை இடம்பெற்ற மோசமான கசப்பான சம்பவங்கள் விரும்பியோ விரும்பாமலோ இனங்களிடையே விரிசலை ஏற்படுத்திற்று எனலாம். அந்த கசப்பான உணர்வுகளை வைத்துக்கொண்டு இனரீதியாக ஒருபோதும் முன்னேறமுடியாது. அதை வைத்து தற்போதுள்ள சம்பவங்களை நோக்கினால் அது பிழையாகத்தான் விளங்கும். ஒரு பிரச்சினையைப் பார்ப்பதில்தான் அதன்தீர்வு தங்கியுள்ளது. நாம் எமது குழந்தைகளை பிரித்துப் பிரித்து வளர்த்துவிட்டு தற்போது சேருங்கள் நல்லிணக்கமாக வாழுங்கள் என்றுசொன்னால் நடக்குமா? 

நாம் எமது சிறுபான்மை மக்களை அரவணைக்கத்தயாரில்லை என்றால் நாட்டில் பெரும்பான்மை எப்படி எம்மை அரவணைக்கும்? அது நியாயமா? சிந்தியுங்கள். எனவே முதியோர்கள் கடந்தகால ஒன்றாகவாழ்ந்த ஜக்கிய உணர்வுகளை சம்பவங்களை இன்றைய இளச்சந்ததியினருக்கு எடுத்துச்சொல்லவேண்டும். நாம்பேசாது தப்பிக்கிறோம் என்ற நினைப்பில் தவறு செய்கிறோம்.என்றார்.

அங்குரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில்:

இன்றைய இனவிரிசலுக்கு அடிப்படையாக அரசயில்வாதிகளை குற்றம்சாட்டுவது வழக்கம். அதில்தவறுமில்லை. அதற்காக மக்களாகிய நாம் பலிக்கடாவாகிவருவருவது எத்துணை பொருத்தம்?

இன்னும்பல பிரச்சினைகள் பேசப்படாமலுள்ளன. அவைகலந்துரையாடி பேசப்பட்டு தீர்க்கப்படவேண்டும்.விட்டுவைத்தால் அது பூதாகரமாகமாறும்.

ஒரு இனம்கூடுதலாக எந்தமொழியைப் பேசுகின்றதோ குறிப்பாக வடக்கிழக்கில் தேசியகீதம் தமிழில்பாடப்படவேண்டும்.இங்கு தமிழ்பேசும்மக்கள் கூடியிருக்கின்ற இக்கூட்டத்தில் சிங்களத்தில்தேசியகீதம் இசைக்கப்பட்டது. நாம்பெரும்பான்மையைமதிக்கின்றோம்.அதற்காக எமதுஉரிமைகளை உணர்வுகளை அடவு வைக்கமுடியாது.அதை மதிக்கவேண்டும்என்றார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe