(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பி.வனிகசிங்க இவருக்கான நியமனத்தை வழங்கியுள்ளார். இவர் இன்று புதன்கிழமை (22-04-2020) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார்.
1991.01.04ஆம் திகதி பிறந்த இவர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை கற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார். இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கற்று விளையாட்டு, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவப் பட்டதாரியாகி வருமான பரிசோதகராக பதவி பெற்றார்.
அதன் பின்னர் வருமானப் பரிசோதகர் பதவியை விட்டு விலகி 2017ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தைப் பெற்று சம்மாந்துறை கல்வி வலயத்தில் இராமகிருஷ்னன் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய நிலையிலேயே இவர் இலங்கை நிருவாக சேவை அதிகாரியானார்.
இவர் மருதமுனை மிமா சமூக சேவை அமைப்பின் உறுப்பினராக இருப்பதுடன் சமூக சேவையில் அதிக ஆர்வமுடன் செயற்பட்டு வருகின்றார்.
இவர் பெரியநீலாவணை அக்பர் கிராமத்தைச் சேர்ந்த அகமது சிராஜூதீன், ஜஃபுல் அறவியா தம்பதியின்.