(ஷய்பான் அப்துல்லாஹ்)
கல்முனை பிரதேச மின் பொறியியலாளர் காரியாலயத்தில் மின் பட்டியல் செலுத்த வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக கால்களின் அழுத்தத்தினால் டெப்பினை திறந்து கைகளை சுத்தம் செய்யும் சாதனம் நேற்று (21) முதல் பாவனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பிரதேச மின் பொறியியலாளர் காரியாலயத்திற்கு மின் பட்டியல் செலுத்த மற்றும் சேவையின் நிமித்தம் வரும் வாடிக்iகையாளர்கள் தங்களது கைகளினால் டெப்பினை திறந்து கைகளை சுத்தம் செய்வது விட்டு, மீண்டும் டெப்பினை பூட்டுவதன் மூலம் ஏற்படக்கூடிய தொற்றிலிருந்து வாடிக்கையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை பாதுகாக்கும் முகமாகவே இந்த புதிய ரக சாதனம் பாவனைக்கு வைக்கப்பட்டுள்ளது.