சம்மாந்துறை அன்சார் (Chief Editor - Sammanthurai24.com)
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் 40 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் இன்று மாலை வரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16116-ஆக அதிகரித்துள்ளது. 2301 பேர் குணமடைந்துள்ளனர். 519 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் நோயின் வீரியத்தை அறியாமல் சிலர் கட்டுப்பாட்டை மீறுகின்றனர். இதனால் அதிகாரிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தற்போது வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், சமூகப் பற்றாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் இந்தியாவில் இந்துத்துவவாதிகளினால் மற்றும் RSS அமைப்பினரால் கொரோனா முஸ்லிம்களின் பக்கம் திருப்பப்பட்டு அதனுாடாக அவர்கள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும், நபிகள் நாயகத்தையும் அவதுாறாக பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் கொரேனா பரவுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என குற்றம் சாட்டி இந்திய முஸ்லிம்களை இந்துக்கள் தாக்கி, அவதுாறாக பேசுவதையும் கண்டித்து சவுதி, டுபாய், குவைத் போன்ற நாடுகளில் உள்ள புத்திஜீவிகள், மார்க்க அறிஞர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு தீய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் RSS பயங்கரவாத இயக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு அரபு நாடுகளில் உள்ள புத்திஜீவிகள், மார்க்க அறிஞர்கள் கருத்துத் தெரிவித்த நிலையில் இந்தியப் பிரதமர் மோடி ‘‘கொரோனா தாக்குவதற்கு முன் இனம், மொழி மதம், நியம், சாதி, மதம் பார்க்காது. நம்முடைய பதில்கள், நடத்தை ஆகியவை ஒருங்கிணைப்பு மற்றும் சகோதரத்துவத்தை முதன்மையாக கொண்டதாகவே இருக்க வேண்டும். நாம் இதில் ஒன்றாக இணைந்திருக்கிறோம்’’ எனத் தெரிவித்திருக்கின்றமை கவனிக்கத் தக்கதாகும்.
செய்தியோடு தொடர்பான இணைப்புகள் -