Ads Area

சவுதி அரேபியாவில் 10 ஆயிரத்தை நெருங்கி விட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை.

சவூதியில் இன்று 1088 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று! எண்ணிக்கை 9362 ஆக உயர்வு!

சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (19.04.2020) பதிதாக 1088 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 



இதனோடு சேர்த்து அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 9362 ஆக உயர்ந்துள்ளதாக சவுதியின் சுகாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதுவரை சவூதியில் 97 பேர் கொரோனா காரணமாக மரணித்துள்ளதோடு 1398 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் தொடக்கம் 2 இலட்சத்தை எட்டலாம் என முன்னர் சவுதி அரேபிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

கடந்த நாட்களாக சவுதி அரேபியாவில் கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றமைக்கான காரணம் சவுதியில் உள்ள சுகாதாரத் துறையினர் தொழிலாளர்களின் இருப்பிடங்களுக்கு சென்று அங்கு முழுமையான பரிசோதனைகள் செய்வதனாலேயே அதிக எண்ணிக்கையிலானவர்கள் அடையாளம் காணப்படுவதாக சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன. 

தகவல் - சம்மாந்துறை அன்சார் (Chief Editor - Sammanthurai24.com)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe