Ads Area

பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் உயிரை மாய்த்து கொண்ட மாணவி.

- சிவா ராமசாமி -

நேற்றையதினம் வெளியிடப்பட்ட கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மன விரக்தி அடைந்த மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார் .

இந்த சம்பவம் முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இன்றைய தினம் (28) இடம்பெற்றுள்ளது . சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற சந்திரன் கம்சிகா (வயது 17) என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.

நேற்றைய தினம் வெளியாகிய சாதாரண தர பரீட்சை பெறுபேற்றில் சிறந்த பெறுபேற்றைப்பெற்று உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலோடு காத்திருந்த குறித்த மாணவிக்கு உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்க கூடிய தான் எதிர்பார்த்த பெறுபேறு

கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இன்று காலை தவறான முடிவை எடுத்து வீட்டின் அறையை தாழ்ப்பாளிட்டுவிட்டு சேலை ஒன்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

இந்த தற்கொலை சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்த மாணவியின் இறப்பில் சிலாவத்தை கிராமமும் பாடசாலை சமூகமும் சோகத்தில் மூழ்கியுள்ளனர் .




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe