Ads Area

புத்த சமய பாடத்தில் ஏ சித்தி ; சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவன் மொஹமட் றஸ்லான் சாதனை.

ஏ.அகீல் சிஹாப்

குருநாகல் மலியதேவ கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றியிருந்த சம்மாந்துறையை பிறப்பிடமாகவும் குருநாகல் கிரிஉல்ல பிரதேசத்தை வளர்ப்பிடமாகவும் கொண்ட மொஹமட் றிஸ்மி மொஹமட் றஸ்லான் எனும் முஸ்லிம் மாணவன் நேற்று (27) வெளியாகிய சாராதணதர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் புத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று அரிதான சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து குறித்த பாடசாலைக்கு தெரிவாகிய இம்மாணவனுக்கு இஸ்லாம் பாடத்தை கற்பதற்கான சூழ்நிலை குறித்த பாடசாலையில் கிடைக்காததன் காரணமாக புத்த சமய பாடத்தை கற்று அதில் ‘ஏ’ சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த மாணவன் 8 பாடங்களில் ‘ஏ’ சித்தியும் 1 பாடத்தில் ‘பி’ சித்தியும் பெற்றுள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe