Ads Area

வெளியான க.பொ.த.சா. தரப் பரீட்சை முடிவுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை கல்வி வலையத்தில் முன்னிலை.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி முன்னிலை..!

நேற்று வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை கல்வி மாவட்டத்தில் முன்னிலை வகிக்கின்றது.

பரீட்சைக்குத்தோற்றிய மாணவிகளில் 16 மாணவிகள் 9A சித்தியையும் 13மாணவிகள் 8A+B சித்திகளையும் 04 மாணவிகள் 8A+C சித்திகளையும் பெற்றுள்ளனர்.

பரீட்சைக்குத்தோற்றிய 345 மாணவிகளில் 87.21வீதமான மாணவிகள் உயர தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

9Aசித்தி பெற்ற 16 மாணவிகளுல் 03 மாணவிகள் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்குத்தோற்றிய மாணவிகளாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த முறை பரீட்சை முடிவுகளை ஒப்பிடுகையில் இம்முறை பரீட்சை முடிவுகள் 12% அதிகரிப்பைத் தந்துள்ளதாகவும் இச்சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களான மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள அதிபர் யூ.எல்.அமீன், இதற்காக அயராது உழைத்த பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் பகுதிதித்தலைவர்கள் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்களுக்கும் கல்லூரி அதிபர் யூ.எல்.அமீன் நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு கல்லூரியின் பரீட்சைப் பெறுபேறுகள் நாடளாவிய ரீதியில் கல்வியின் முன்னேறறத்தில் 0.15% பங்களிப்பை வழங்கியுள்ளமை இக்கல்லூரியின் வரலாற்றில் புதிய அத்தியாயமாகும் எனவும் தெரிவித்தார்.

ஏ.பி.எம்.அஸ்ஹர்


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe