சம்மாந்துறை அன்சார்.
அரபு நாடுகளில் மத நிந்தனைக் கருத்துக்களுக்கு ஒரு போதும் இடம் கிடையாது, அது எம் மத நிந்தனைக் கருத்துக்களாக இருந்தாலும் சரியே. அரபு நாடுகளில் வசிக்கும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் யாராகினும் மத நிந்தனைக் கருத்துக்களை பேசினால் அவர்களுக்கெதிராக கடுமையான சட்டப் பாய்ச்சல் இடம் பெறும்.
அரபு நாடுகளில் மத நிந்தனைக் கருத்துக்களுக்கு ஒரு போதும் இடம் கிடையாது, அது எம் மத நிந்தனைக் கருத்துக்களாக இருந்தாலும் சரியே. அரபு நாடுகளில் வசிக்கும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் யாராகினும் மத நிந்தனைக் கருத்துக்களை பேசினால் அவர்களுக்கெதிராக கடுமையான சட்டப் பாய்ச்சல் இடம் பெறும்.
தற்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய கொரோனாவை முஸ்லிம்களோடும், இஸ்லாத்தோடும் தொடர்புபடுத்தி பல இந்திய இந்துக்கள் குறிப்பாக RSS அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் பல்வேறு மத நிந்தனைக் கருத்துக்களை சமூகவலைத்தளங்கள் வாயிலாக அவதுாறு பரப்பி வருகின்றார்கள். குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்துத்துவவாதிகள் இவ்வாறான நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து ஐக்கிய அரபு ராஜ்ஜிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹென்ட் அல் காசிமியும் தனது கண்டனத்தை தனது டுவீட்டர் பதிவுகள் மூலம் செய்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிப்படையாக இன-மத நிந்தனைகள் மற்றும் பாகுபாடு காண்பிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சை விட்டு வெளியேறும்படி செய்யப்படுவர். ஆளும் அரச குடும்பம் இந்தியர்களுடன் நண்பர்களாகவே இருந்து வருகின்றது ஆனால் இஸ்லாத்தை நிந்திக்கும் உங்களது முரட்டுத்தனத்தை எங்களால் வரவேற்க முடியாது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களது வேலைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படுகிறது, இங்கு யாரும் இலவசமாக வேலை செய்யவில்லை. உங்கள் உணவை இந்த நாட்டிலிருந்து நீங்கள் தேடிக் கொள்கின்றீர்கள் ஆனால் இந்த நாட்டு மக்களையும், இஸ்லாத்தையும் இழிவாகப் பேசுகிறீர்கள். என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இளவரசி ஹென்ட் அல் காசிமி இஸ்லாமிய விரோத கருத்துக்களை பரப்புவோருக்கு எதிரான சட்டம் தொடர்பாக கீழ்க் காணும் படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.