Ads Area

குவைத்தில் உள்ள இலங்கைத் துாதரகம் இலங்கையர்களால் முற்றுகை.

குவைத் நாட்டில் தொழில்வாய்புக்காக சென்று பல்வேறு காரணங்களால் தமது விஸாக்களை புதுப்பிக்கவோ, மாற்றம் செய்யவோ முடியாத நிலையில் சட்ட விரோதமாக தொழில் புரிந்து வந்தோர் தத்தமது நாடுகளுக்கு திரும்பிச் செலவதற்காக அந் நாட்டு அரசாங்கம் ஏப்ரல் 01 தொடக்கம் ஏப்ரல் 30 ம் திகதி வரை பொது மன்னிப்புக்காலம் ஒன்றை அறிவித்திருந்தது.
அப்பொது மன்னிப்புக் காலம் பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு இலங்கையர்களுக்கு ஏப்ரல் 21 தொடக்கம் ஏப்ரல் 25 வரையான ஐந்து தினங்களை சரணடைவதற்காக அறிவித்துள்ளது.

அத்துடன் சரணடைவதற்கான குவைட் அரசின் முகாம்களுக்குள் அகாமா முடிவடைந்த நிலையில் தொழில் புரிந்து வந்த கடவுச்சீட்டு தனது வசம் உள்ளவர்களை மாத்திரமே பொறுப்பேற்பதாகவும், தம் வசம் கடவுச்சீட்டோ, அல்லது ஏனைய தஸ்தாவேஜுகளோ இல்லாதவர்களை அனுமதிக்கவில்லை.

இதே நேரம் கடவுச்சீட்டு இல்லாத நிலையிலுள்ளவர்கள் தத்தமது நாட்டு தூதராலயங்கள் மூலம் தற்காலிக கடவுச்சீட்டை பெற்றே நாடு திரும்புவதற்கான தமது பயன ஏற்பாடுகளைத் தொடர முடியும்.

இவ்வாறான பொதுமன்னிப்புக் காலத்தை குவைட் அரசு அறிவித்தும் இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பியனுப்புவதற்கான எந்தவாரு நடவடிக்கைகளையும் குவைத்தில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலயம் மேற்கொள்ளாது தூதரக நுளைவாயிலை மூடிவைத்துள்ளதனாலும், இலங்கை தூதரகம் உறுதியான எந்த தீர்வையும் அறிவிக்காத காரணத்தினாலும் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் ஆத்திரமுற்ற நிலையில் இன்று (21/04/2020) இன்று குவைதிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகை இட்டுள்ளனர்.

குவைத் அரசினால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டு நாடு திரும்பவுள்ள பல்லாயிரக் கணக்கான இலங்கையர்களுள் நாடு செல்வதற்கான பயண ஏற்பாட்டுக்கு தேவையான எந்தவித தஸ்தாவேஜுகளுமற்ற 500 க்கும் 600 க்கும் உட்பட்ட இலங்கையர்களே இன்றைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, 

பொது மன்னிப்பு காலத்தில் இலங்கை செல்ல இலங்கை அரசின் அனுமதி கிடைக்கும் வரை எத்தகைய பயண ஆவணங்களும் தூதராகத்தினால் விநியோகிக்கப்படமாட்டாது என்பதனை அறியத் தருகிறோம். எனவே பயண ஆவணங்களைப் பெற தூதரகத்துக்கு வருவதனை தவிரந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். என்பதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தனது முகநூல் பக்கம் ஊடாக அறிவிப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Qatar Tamil News.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe