பாறுக் ஷிஹான்
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் அம்பாறையிலும் இன்று செவ்வாய்க்கிழமை (21 ) ஆன்மீக வழிபாடுகள் நடைபெற்றன.
இதனடிப்பையில் சம்மாந்துறையிலும் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் விசேட பிரார்த்தனை இடம்பெற்றது. இந் நிகழ்வில் சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக் நம்பிக்கையாளர் உப செயலாளர் அஷ்செய்க் இஸ்காக் நளிமீ முச்சபை தலைவர் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.