கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதை தடுப்பவர்கள் மற்றும் தடுக்க முயற்சிப்பவர்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்வதைத் தடுப்பதும், தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, பொது சுகாதார சட்டத்தின்கீழ், அபராதம் உட்பட குறைந்தபட்சம் ஓராண்டும், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.