Ads Area

உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்தை கடந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, 29 லட்சத்து 87 ஆயிரத்து 98 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 19 லட்சத்து 3 ஆயிரத்து 938 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 582 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து 8 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2 லட்சத்து 6 ஆயிரத்து 681 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

அமெரிக்கா - 55,341
ஸ்பெயின் - 23,190
இத்தாலி - 26,644
பிரான்ஸ் - 22,856
ஜெர்மனி - 5,913
இங்கிலாந்து - 20,732
துருக்கி - 2,805
ஈரான் - 5,710
சீனா - 4,632
பிரேசில் - 4,205
கனடா - 2,560
பெல்ஜியம் - 7,094
நெதர்லாந்து - 4,475
சுவிட்சர்லாந்து - 1,610
அயர்லாந்து - 1,087
ஸ்வீடன் - 2,194
மெக்சிகோ - 1,305
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe