பாறுக் ஷிஹான்
ரஞ்சன் ராமநாயக்க போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை வெளியில் கொண்டுவர போராடலாம் .ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்தப் பிரச்சினைகளை பெரும்பாலும் பேசுவதை காண முடியவில்லை என என உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி காரியாலயத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை(25) இரவு இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது பற்றி மேலும் குறிப்பிட்டதாவது
இந்நிலையில் அரசாங்கத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளாகும் நிலைமையில் சுமந்திரன் அவர்கள் கருத்து தெரிவித்து தெரிவித்திருப்பது ஒரு மனிதாபிமான ஒரு செயலாக நாங்கள் காணவில்லை. இவ்வாறான விடயங்களை அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக வேண்டி தான்.ஆனால் அந்தப் பிரச்சினைகளை சுமந்திரன் பெரும்பாலும் பேசுவதை காண முடியவில்லை. ஆனால் இவர் சில தீய சக்திகளுக்கு விலை போனவர் போன்று தீய சக்திகளுக்கு ஆதரவாக வேண்டுமென்றே அரசாங்கத்தை குழப்ப வேண்டும் என்பது போன்று பேசிக் கொண்டு இருக்கின்றார். இவர் அடிக்கடி சஜித் பிரேமதாசவின் கட்சி உறுப்பினர்களுக்கு அவர் மிகவும் ஆதரவாக இருப்பது போன்று தெரிகிறது. ரன்ஜன் ராமநாயக்கவிற்கு தன்னுடைய அனைத்தை தியாகங்களையும் செய்து கொண்டிருக்கின்றார் ரஞ்சன் ராமநாயக்க போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை வெளியில் கொண்டுவர போராடலாம் .