இன்றைய உலகமும், பெண்களும்...!
------------------------------------------
( ஆக்கம் : அஷ்கி அஹமட் )
" வீட்டுத் தோட்டத்தில் பழ மரம் வளர்த்தால் அது காயாகி , கனி ஆனால் சந்தையில் விற்கத்தான் வேண்டும்."
இன்றைய உலகில் பெண்களின் நிலையும் இவ்வாறுதான்.
அன்றொரு காலம் இருந்தது பெண் குழந்தைகள் பிறந்தால் அது தன் வம்சத்திற்கு சரியாக அமையாது என்று கொன்று குவித்த காலம். ஆனால் அந்த செயல்கள் செய்தவன் அறிந்திருக்கவில்லை தானும் ஒரு பெண் மூலம் வந்தவன் என்று.
எமது ஒவ்வொரு மதத்திலும் சரி, வரலாறுகளிலும் சரி பெண்கள் முக்கியமானவர்களாக காணப்பட்டுள்ளனர். உதாரணமாக,
• முஸ்லிம் மதத்தில்,
• இந்து மதத்தில்,
இந்துக்களின் கடவுள்கள் வரிசையில் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள்கள் பெண் கடவுள்கள்.
• பெளத்த மதத்தில்,
உலகிற்கு பெளத்த மதத்தை பரவ நாடுகள் தாண்டி யாத்திரை செய்தவர் சங்கமித்தை எனும் பெண்.
• கிறிஸ்தவ மதத்தில்,
ஏசுநாதரின் தாயானா மர்யம் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுன்றது. அவரும் ஒரு பெண்தான்.
• ஆரியர் வருகையில் இலங்கையில் விஜயன் கண்ட முதல் மனிதன் குவேனி எனும் பெண்ணைத்தான்.
ஆனால் ஒரு சில நூற்றாண்டுகளின் பின் (18ம், 19ம் நூற்றாண்டுகளில்) பெண்கள் குடும்பத்தை தாங்கும் சக்தியாக ஆண்களால் தீர்மானிக்கப்பட்டனர்.
பின்னர் பெண்கள் சந்தித்த உலகம் பல்வேறு கோணல்களாக காணப்பட்டன.
ஒரு பெண் குழந்தை பிறந்தாள், அப் பிள்ளையை வளர்த்து இன்னொருவரிடம் கையளிக்கும் வரை அந்த பெற்றோர் படும் கஷ்டங்கள் ஏராளமாக உள்ளன.
ஒரு பெண் சிறு வயதில் சேட்டை செய்து வளர்ந்தாலும் ஒரு நாள் அவள் வாழ்வே மாறும். தான் பருவ வயதை அடையும் போது " பெரிய மனிசி" ஆகிட்டாய் என்று மற்றவர்கள் அழைக்கும் போது தானாகவே தனக்குள் பக்குவம், அடக்கம், வெட்கம் அனைத்தும் ஆரம்பிக்கின்றன.
இந்தக் காலம் அவள் அனுபவிக்கும் கொடிய காலம்.
இந்த குறுகிய வாழ்க்கையில் சமூகத்தில் அவள் சந்திக்கும் தருணங்கள் மிகவும் கடினமானது.
• பெண்னின் உடல் தோற்றமும், உடல்வாகும் மென்மையானது என்பதால் அவளை பார்க்கும் ஒரு கொடிய ஆண் கூட்டத்திற்கு காமப் பசி ஏற்படுகின்றது. அந்தக் கொடிய கூட்டத்திற்கு பெண் என்றால் போதும் பிறந்த குழந்தை, பருவ வயது அடைந்தவள், வயதானவர்கள் என்போரும் பசி தீர்க்க தேவைப்படுகின்றனர். மறந்துவிட்டார்கள் போல தன்னை படைத்தவளும் பெண்தான் என்று.
• பெண்கள் பல துறைகளில் சிறப்பியல்பு கொண்டவர்கள். எமது தாயானவள் சமையல் துறையில் மகத்துவம் வாய்ந்தவள்.மேலும், ஏன் நாம் அறிந்த வகையில் உதாரணம் சொல்லப்போனால்,
கிளாரி கிளிண்டன் (அரசியல்)
சந்திரிக்கா அம்மையார் (அரசியல்)
கல்பனா சவுலா (விண்வெளி)
அன்னை தெரேசா (சமூக சேவை)
ஜெயலலிதா ( சினிமா, அரசியல்)
என்று அடுக்கிக் கொண்டே சொல்ல முடியும். ஆனால் இன்று பெண்கள் கல்வித் துறையில் முன்னேரிக் கொண்டு இருந்தாலும், "பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது" என்ற கூற்று அவர்களின் திறமைகளை மழுங்கடிக்கச் செய்யப்படுகின்றன.
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை பேசும் நவீன உலகில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். தடுப்பது பிழைதானே?
• இந்த நவீன உலகில் பெண் கூட்டத்தினர் தங்களை அடையாளப்படுத்த சமூக வலைத்தளத்தில் உலா வருகின்றனர். ( இது ஒரு சில மார்க்கங்களுக்கு பிழை என்ற வாதம் உள்ளது). ஆண்களுக்கு மாத்திரம் சமூக வலைத்தளங்கள் சொந்தமில்லை உலக மக்களுக்கு சொந்தமானது. ஆனால் அதில் கூட பெண்கள் பல அசெளகரீகங்களை சந்தித்து வருகின்றனர்.
ஒரு பெண்ணின் பெயரைக் கண்டால் போதும், அவர்களிடம் நலம் விசாரிப்பது தவிர்ந்து வலுக் கட்டாயமாக தகவல்கள் திரட்டும் ஆண்களும் இருக்கின்றனர். ( உதாரமாக Number, photo...etc)
(இக் கருத்து உங்களுக்கு மட்டுமல்ல ஆண் என்ற வகையில் எனக்கும் தான்.)
ஒரு கூட்டம் இன்னும் இருக்கிறது பெண்களை சமூகத்தின் மத்தியில் பேச விடாமல் தடுக்க. மன்னிக்கவும் இது நவீன உலகம். பல நூற்றாண்டுக்கு முன் உள்ள உலகம் இதுவல்ல.
பெற்றோருக்கு,
உங்கள் பெண் பிள்ளைகள் விரும்பும் வாழ்க்கையை வழங்க முன்வாருங்கள் கண்டிப்போடும், சமூக அக்கறையோடும்.
திருமணமான ஆண்களுக்கு,
உங்கள் மனைவிகள் பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதனை நிறைவேற்ற நீங்கள் முன் வர வேண்டும். உங்கள் மதம், குடும்பம், சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளும் வகையில் சந்தர்ப்பம் வழங்குங்கள்.
பெண்களுக்கு,
உங்களை முழுமையாக சரி என்றும் சொல்ல முடியாது. உங்கள் பக்கமும் பிழைகள் உள்ளது. உங்களுக்கு தருகின்ற விடயங்கள் அலட்சியமாய் நடந்து கொள்ளும் போது பல விடயங்களை நீங்கள் எதிர்மறையாக எதிர் கொள்கின்றீர்கள்.
உங்கள் ஆடை அலங்காரம், சிகை அலங்காரம், நடத்தைகள், பேசும் விதங்கள், உறவுகள் பேணும் விதங்கள் என்பன அனைத்தும் ஆரோக்கியமாக இருந்தால் ஆண் வர்க்கம் உங்களை வரவேற்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.
எனவே, வளர்ந்து வரும் பெண்கள் சமூகம், மதம் , சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் ஆரோக்கியமான சமூகத்தில் வாழ வேண்டும். இதற்கு ஆண்களாகிய நாம் வழிவகுக்க வேண்டும்.
பெண்கள் பேணி நடந்தால் இன்னும் முன்னேற்றம் அடைய முடியும்.
"ஒழுக்கம் உயிரிலும் மேலானது. பெண்களுக்கு அத்தியாவசியமானது.