பொருளாதார முடக்கம் ஏன் கிராமங்களை பாதிப்பதில்லை...
(கிராமங்கள் பசுமையாக இருக்கும் பட்சத்தில்)
ஒரு வீட்டில் முருங்கை இருக்குதுன்னு வச்சுக்குவோம் அந்த முருங்கை மரம் குறைந்தபட்சம் அந்த தெருவில் இருக்கும் பத்து வீட்டுக்காவது பயன்படும்... எனில் வீட்டுக்கு ஒரு முருங்கை மரமிருந்தால் கற்பனை செய்து பாருங்கள்,
இது முருக்கைக்கு மட்டுமல்ல கத்தரிக்காய்/அவரை/பூசணி/புடலங்காய்/வெண்டைக்காய்/தக்காளி/பச்சைமிளகாய்/போன்ற எல்லா காய்கறிகளுக்கும் பொருந்தும்...
சோறு,குழம்பு வச்சாலும் அதை அக்கம் பக்கத்தில் பகிர்ந்து உண்ணும் பழக்கம் கிராமத்தில் அன்றும் இன்றும் என்றும் உண்டு,
ஊருக்குள்ள ஒரு குளமிருந்தா போதும் மொத்த ஊரின் தண்ணீர் தேவையும்,உணவுக்காக மீனும் கிடைத்துவிடும்,,,நீங்க இவைகளை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியமிருக்காது...
சிலிண்டர் தேவையில்லை ஊருக்குள் ஒரு காடும் அதில் காய்ந்த விறகுகளும் போதும் இவ்வளவு ஏங்க உங்க வீட்ல மரமிருந்தாலே போதும் உங்கள் வீட்டு அடுப்பெரிய,,,
அது போக ஆடு,மாடு,கோழி போதும் உங்க அன்றாட தேவைகளுக்கும்....
முடிந்தளவுக்கு மரம் வளர்க்க முயலுங்கள் அதை ஊருக்காக வளர்க்க மனமில்லையென்றாலும் உங்களுக்காக அல்லது உங்கள் சந்ததியினருக்காகவாவது வளர்க்க முயலுங்கள்... மற்ற தேவைகள் தன்னால் நிவர்த்தியாகும்