Ads Area

காத்தான்குடி தள வைத்தியசாலை தொடர்பிலான எதிர்ப்பு ஆதாரமற்றவை- கிழக்கு ஆளுனர்.

(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி வைத்தியசாலையை கொரோணா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்துவதற்கு எதிரான எதிரிப்பு ஆதாரமற்றது என கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் கூறுகிறார், விசேஷ அறிவிப்பை வெளியிட்டு அவர் இது பற்றி தெரிவித்தார். ஆளுனர் வெளியிட்ட அறிவிப்பில் இவ்வாறு குறிபிடப்பட்டுள்ளது.

covid 19 கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்பதற்காக தனிமைப்படுத்தும் நிலையமாக பயன்படுத்திய புனானி தனிமைபடுத்தும் நிலையத்தை படையினர் மிகவும் சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பதோடு, அவர்கள் அந்த செயலை செயற்படுத்துவது சம்பந்தமாக பலரது பாராட்டை பெறுறிருப்பது இரகசியமற்றதாகும்

அத்தோடு மட்டக்களப்பு வைத்தியசாலையும் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசாங்கத்தால் தயார் செய்தது. அந்த சந்தர்பத்தில் ஏற்பட்ட தெளிவின்மையால் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இந்த வைரஸ் தொற்றுகுள்ளான முதலாவது நோயாளி மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலை சிகிச்சை அளிக்க பயன்படுத்துவதன் பெறுமதியினை பிரதேச மக்களால் புரிந்து கொண்டனர். அதன் பிறகு அந்த நோயாளி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ID H வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆர்பாட்டம் செய்தவர்களுக்கு இதன் தீவிரமும் , தெளிவின்மையும் புரிந்தது இதன் பிறகே என நான் நினைக்கிறேன்

நிலைமை அவ்வாறு இருந்தும் மட்டக்களப்பு வைத்திய சாலையில் ஏனைய நோயாளருக்கு சிகிச்சை தொடர்ந்தும் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு எந்த நிலையிலும் அந்த சிகிச்சை இடைநிறுத்தப்படவில்லை.

அதற்கிடையில் எமது காத்தான்குடி வைத்தியசாலை covid 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் நோயாளருக்கு சிகிச்சை அளிக்க பொருத்தமானது என தேர்ந்து எடுக்கப்படிருந்தது.

அதன்படி திங்கட்கிழமையாகும் போது அந்த தொற்றுகுள்ளான நோயாளர் 24 பேரை அனுமதிக்கப்பட்டது.

காத்தான்குடி வைத்தியசாலைக்கு இந்த தொற்று நோயாளர்களை கொண்டு வருவது சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளது. இந்த சந்தர்பத்தில் மாகாண பணிப்பாளர் மூலம் காத்தான்குடி மக்களுக்குள் எழுந்துள்ள இந்த எதிரிப்பு சம்பந்தமான உண்மைத்தன்மையை பற்றிய விடயங்களை நான் கண்டறிந்தேன்.

அங்கு எனக்கு அறிந்து கொள்ள முடிந்தது மட்டக்களப்பு வைத்தியசாலை தவிர்ந்த தீவிர சிகிச்சை , அவசர சிகிச்சை மிகவும் முன்னேற்றமான பிரிவுகள் உள்ளது காத்தான்குடி வைத்திய சாலையில் என்று.

இந்த covid19 வைரஸ் தோற்றுள்ள நோயாளருக்கு சிகிச்சை அளிக்க காத்தான்குடி வைத்தியசாலைக்கு தேவையான சகல வசதிகளையும் covid 19 செயலணி சுகாதார அமைச்சின் மற்றும் தோற்று நோய் கல்வியல் பிரிவின் மேற்பார்வையில் கீழ் வழங்கியிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் எனக்கு அறிவித்தார்.

அதன்படி எதிர்ப்பின் பெறுபேராக கழிவு முகாமைத்துவத்திற்காக விசேஷ திட்டம் ஒன்றும், எரிப்பு இயந்திர திருத்த வேளைகளுக்காக விசேஷ நிதி ஓதிக்கிடும், கர்ப்பிணித் தாய்மாருகுக்காக மேலதிக அம்பியுலன்ஸ் ஒன்றும் .சிறுநீரக அலகை தனிமைபடுத்துதல் உளவியல் பகுப்பாய்வு அலகை தனிமைப்படுத்தல் ,ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கள் அவரகளுக்குக்காக வேறு உணவு வெளியிலிருந்து கொண்டு வருவதற்கான பாரிய நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்திருப்பது குறிப்பட்டத்தக்கது. உலகம் முழுவது பரவுவது கட்டுப்படுத்த முடியாத அளவில் என்பது மிகத் தெளிவாகிறது.

இன்றுடன் இந்த நாட்டில் முதல் covit19 தொற்று நோயாளியே சந்தித்து ஒரு மாதத்திற்கு மேற்பட்டுள்ளது

அதனால் அரசாங்கம் எனற வகையில் வைரஸ் தொற்றால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைக்க எடுக்கப்படுகிகிற நடவடிக்கைகள் மிகவும் கவணமாக நல்ல புரிதலுடன் மக்களுக்கு கடுகு அளவேனும் அசௌகரியங்கல் ஏற்படாதவாறு அரசாங்கத்தால் முடிந்த சகல முயற்சிகளையும் எடுத்துள்ளது, அதை உலக சுகாதார அமைப்பினால் பாராட்டியுள்ளதொடு, நாங்கள இந்த தோற்று நோயினால் பாதிப்பதை கட்டுப்படுத்த பல நாடுகளுகிடையில் எமது நாடு மதிப்பிடப்பட்டிருப்பதை நான் புதிதாக குறிப்பிடத் தேவையில்லை

ஆயினும் நாடு என்ற முறையிலும் பிரஜை என்ற முறையிலும் அரசாங்கம் கொண்டு செல்லும் இந்த திட்டத்திற்கு ஒத்தாசை வழங்குவது காலத்தின் தேவை என நான் நம்புகிறேன்

நிலைமை அப்படி இருக்க எமது நாட்டில் எந்த சந்தர்பத்தில் எந்த இடத்தில் இந்த நோய் தொற்றும் என்பது யாரும் அறியாது.

அதனால் எமது மக்களுக்கா அவர்களது பாதுகாப்பிற்காக காத்தான்குடி வைத்தியசாலையை பயன்படுத்துவது பற்றி தேவையற்ற முறையில் விமர்சிக்கும் விடயம் அல்ல.

இந்த இக்கட்டான சந்தர்பத்தில் சகல இனங்களும் ஒரே நாட்டில் வாழும் பிரஜைகள் என்ற முறையில் மிக ஒத்துழைப்புடநும் சக வாழ்வுடனும் மற்றும் ஒழுக்கத்துடனும் இந்த சந்தர்பத்தில் அற்பணிக்க வேண்டும்

இந்த நோயை எமது நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு இலங்கை பிரஜை என்ற முறையில் உலகிற்கு முன்மாதிரியாகுவோம்.

மும்மணிகளின் ஆசிவேண்டி
அனுராதா யஹ்ம்பத்
ஆளுநர்.
கிழக்கு மாகாணம்

தமிழ் மொழி பெயர்ப்பு- அப்ராரி
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe