அஸ்ரப் ஏ சமட்.
உயிா்த்த ஞயிறு தாக்குதலின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு உயரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை.
உயிா்த்த ஞயிறு தாக்குதல் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு உயிா் நீா்த்தகவா்கள் ஞாபகாா்த்தமாக முஸ்லிம் மத விவகார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இஸ்லாமிய மத துஆப் பிராத்தனைகள் மற்றும் உயிா்நீத்தவா்கள் சாா்பாக இரண்டு நிமிட மௌனம் போன்ற நிகழ்வுக்ள் இன்று 21.04.2020 கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
முஸ்லிம் விவகார தினைக்களத்தின் பணிப்பாளா் அஸ்சேக் ஏ.பி அஸ்ரப், பிரதம மந்திரியின் முஸ்லிம் விவகார இணைப்பளாா் பர்ஸான் மன்சுர், ஜனாதிபதி சட்டத்தரனி அலி சப்ரி, கொள்ளுப்பிட்டி ஜம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபையின் இனைத் தலைவா்கள் முஸ்லிம் சலகுத்தீன், கலில் வக்பு சபையின் தலைவா் சட்டத்தரனி சப்ரி கலிம்தீன் இந்து கிரிஸ்த்துவ மத தலைவா்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா்.