சவுதி அரேபியாவில் தற்போது பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் சிகரெட் போன்ற புகைத்தல் பாவனைப் பொருட்கள் மற்றும் ஷீசா பொருட்கள் போன்றன விற்பனை செய்ய சவுதி அரேபிய நகராச்சி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது என சவுதி கேஷட் (saudigazette) செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சவுதியில் உள்ள மளிகை கடைகள் (பகாலா) மற்றும் பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப அவை விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுகாதார அமைச்சின் ஒப்புதல் பெற்ற பின்னர், கடந்த மாதம் சூப்பர் மார்க்கெட்டுகளில் மருந்தகங்களைத் (பார்மசிகளை) திறக்கவும் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவில் சிகரெட் மற்றும் சீசா போன்ற புகைத்தல் பாவனைப் பொருட்கள் விற்பனை செய்ய ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் அவற்றை சகல சூப்பர் மார்கெட் மற்றும் மளிகை கடைகளிலும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.
டுபாயில் இஸ்லாமிய விரோத கருத்தைப் பதிவிட்ட மற்றுமொரு இந்தியரை அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் விபரம் வீடியோவில்.