Ads Area

திண்மக்கழிவு (குப்பைவரி) வரியினை நிறுத்த நடவடிக்கை எடுத்த கல்முனை முதல்வருக்கு முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் நன்றி தெரிவிப்பு !

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் அறவிடப்படும் திண்மக்கழிவு (குப்பைவரி) வரியை நிறுத்தி வைக்குமாறு என்னால் முன்மொழிப்பட்ட வேண்டுகோளை கருத்தில் கொண்டு நாட்டில் கொவிட் 19 தொற்று நோய் ஏற்பட்ட பின்பு குறிப்பாக மாநகர சபை பிரதேசத்தில் வாழும் மக்கள் பாரிய சிரமத்திற்கும், கஷ்டத்துக்கும், உள்ளாகியுள்ளனர் என்பதை உணர்ந்து நீங்களும் உங்களுடைய மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து ஆலோசித்து இந்த வரியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதை பாராட்டுகிறேன்.

அடுத்த மாதம் ஜூன் முதலாம் திகதியிலிருந்து திண்மக்கழிவு குப்பை வரியை நிறுத்தி வைப்பதற்கு இன்று கல்முனை மாநகர சபை மாதாந்த கூட்டத்தில் கல்முனை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கலாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதை பாராட்டுகிறேன். இதுபோன்ற மக்களின் நலன்மிக்க விடயங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்
முன்னாள் இராஜாங்க அமைச்சர்
பிரதித்தலைவர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe