மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள குதித்த யுவதியை மீட்க நீர்தேக்கத்தில் குதித்து கைப்பற்றிய இரண்டு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி காணாமற் போன நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 10 மணியளவில் தற்கொலை செய்து கொள்ள மேல்கொத்மலை ஆற்றில் குதித்தை 22 வயதுடைய யுவதியை காப்பாற்ற நீர்தேக்கத்தில் குதித்த லிந்துலை ரந்தெனிகல கொலனியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 28 வயதுடைய ஹமீட் ரிஸ்வான் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்
இந் நிலையில் சுமார் 07 மணித்தியாலங்களின் பின்னர் இளைஞன் நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
நன்றி - தமிழன் செய்திகள்.