ஐக்கிய அரபு எமிரேட்சில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர், மாற்று மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதுாறாக பதிவிட்டதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில், கொரோனா பரவியதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்றும், டில்லியில் சுமார் 50 பேர் வரையான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வன்முறையை வன்முறையை, 'தெய்வீக நீதி' என்றும் குறிப்பிட்டு பிரஜ்கிஷோர், பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், அவர் பணிபுரிந்த நிறுவனம், அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஜீன் பிரான்கோயஸ் மிலியன் கூறியதாவது: சகிப்புத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ஊக்குவித்து வருகிறது. இதுகுறித்து, அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எந்த மதம், இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற நடத்தையை நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது. மீறினால், பதவி நீக்கம் செய்யப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.
அண்மைக்காலமாக வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமிய விரோத கருத்துக்களைப் பதிவிட்டு வரும், பேசிவரும் பல இந்துத்துவவாதிகள் வளைகுடா நாடுகளிலிருந்து அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றார்கள் அரபு உலக நாடுகளில் மார்க்க அறிஞர்கள், அரச குடும்பத்தினர், புத்திஜீவிகள் என அனைவரும் தற்போது விழித்துக் கொண்டுள்ளார்கள் என்பதும் அவர்கள் இஸ்லாமிய விரோத கருத்துக்களைப் பரப்புவோர் விடையத்தில் காரசாரமான கண்டனங்களைப் பதிவு செய்து வருவதும் இங்கு மேலேம் குறிப்பிடத் தக்கதாகும்.
தமிழில் - கத்தார் தமிழ் மற்றும் அன்சார்.
செய்தி மூலம் - https://gulfnews.com/uae/islamophobic-posts